இம்மாத இறுதிக்குள் புதுச்சேரி சட்டசபை கூட்டம்
கவர்னர் உரையுடன் இம்மாத இறுதிக்குள் புதுச்சேரி சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று சபாநாயகர் செல்வம் கூறினார்.
கவர்னர் உரையுடன் இம்மாத இறுதிக்குள் புதுச்சேரி சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று சபாநாயகர் செல்வம் கூறினார்.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் தேரோட்டத்துக்கு சபாநாயகர் செல்வம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல்
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. அதற்கு ஏற்ப, புதுச்சேரி முதல்-அமைச்சர் ஆலோசித்து முடிவு எடுப்பார்.
இந்த மாத இறுதிக்குள் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் நடைபெற வாய்ப்பு உள்ளது. இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்து வெளியுறவுத்துறையிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பிரதமர் இலங்கை செல்ல இருப்பதால், இதற்கான நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
புதுச்சேரி சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்குமாறு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2021-22-ம் நிதியாண்டில் புதுச்சேரிக்கு ஜல்சக்தி திட்டத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கியது. இதில் ரூ.7.5 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப, அரசுத்துறை அதிகாரிகள் மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இ்தில், அதிகாரிகள் அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றே தோன்றுகிறது. இது போன்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது, முதல்-அமைச்சருடன் கலந்துபேசி நடவடிக்கை எடுக்க சபாநாயகர் என்ற முறையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story