முதலாமாண்டு என்ஜினீயரிங் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
முதலாமாண்டு என்ஜினீயரிங் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
2021-ம் ஆண்டு இறுதியில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக முதலாமாண்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. அந்த மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வை இந்த மாதம் 21-ந் தேதி முதல் நேரடியாக நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பது கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலான கல்லூரிகளில் முதல் பருவத்திற்கான நேரடி வகுப்புகள் 60 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. முதலாமாண்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வகுப்பறைகளில் படிப்பதற்கு போதுமான நேரம் தரப்படாத சூழ்நிலையில், அவர்களுக்கு நேரடி தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்றும், இது அவர்களுக்கு கடினமான தருணம் என்றும் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
பரிசீலிக்க வேண்டும்
என்ஜினீயரிங் பயிலும் மாணவ, மாணவியரின் முதல் பருவத்தேர்வை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கவும், தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து, என்ஜினீயரிங் முதலாமாண்டு மாணவ, மாணவியரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 10 மாத காலமாக வீடு கட்டுவதற்கு தேவையான இரும்பு கம்பி, செங்கல், எம்.சாண்ட், மரம், பீங்கான் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன. ஏழை மக்களின் வீடு கட்டும் கனவு நிறைவேற வேண்டுமென்றால், கட்டுமான பொருட்களின் விலை கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனை செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.
ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றால் அதனை மத்திய அரசிடம் சுட்டிக்காட்டி அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவந்து, ஏழை-எளிய மக்களின் வீடு கட்டும் செலவினைக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Tags :
Next Story