தமிழக அரசின் பட்ஜெட் - சட்டசபையில் தாக்கல்


தமிழக அரசின் பட்ஜெட் - சட்டசபையில் தாக்கல்
x
தினத்தந்தி 18 March 2022 10:05 AM IST (Updated: 18 March 2022 10:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

2022-23 நிதியாண்டிற்கான ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட் இதுவாகும். 

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாயகராஜன் காகிதமற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த பட்ஜெட்டில் மாநில வருவாயை பெருக்குவது, தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பை அதிகரித்தல், வணிகத்துறை, மருத்துவதுறை, கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகளின் மேம்பாடு தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இன்னும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story