ஹோலி பண்டிகை: டிடிவி தினகரன் வாழ்த்து


ஹோலி பண்டிகை: டிடிவி தினகரன் வாழ்த்து
x
தினத்தந்தி 18 March 2022 12:29 PM IST (Updated: 18 March 2022 12:29 PM IST)
t-max-icont-min-icon

ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“உற்சாகம் பொங்கும் வசந்தத் திருவிழாவான ஹோலிப் பண்டிகையைக்  கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கை எப்போதும் எண்ணங்களாலும்  வண்ணங்களாலும்  ஆனது. எண்ணங்கள் அழகாகி விட்டால் எல்லாமே அழகாகிவிடும். நல்ல எண்ணத்தோடு, அன்பின் வழியாக செய்யப்படும் எல்லா செயல்களுமே நிச்சயம் ஆனந்தத்தைத்  தரும்.

ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரை வாரி இறைத்தும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் ஹோலி திருநாளில், துன்பங்களுக்கு சிவப்பு வண்ணத்தைக் காட்டி, மகிழ்ச்சிக்கு பச்சை வண்ணத்தைக் காட்டுவோம்! அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story