தமிழக பட்ஜெட் 2022 : முக்கிய அம்சங்கள்
எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தினார்.
சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. திருக்குறள் உடன் அவையை தொடக்கி வைத்தார் சபாநாயகர் அப்பாவு.
2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்.
முன்னதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறைச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முதல்-அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்
இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிக்கும் போது, எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்த்தனர்.
பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தினார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றினார்
* மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.
* முதல்-அமைச்சரின் ஒவ்வொரு சிந்தனையிலும் செயலிலும் சுய மரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம் மற்றும் அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிட கொள்கைகள் நிறைந்திருக்கின்றன.
* உக்ரைன் மீதான ரஷிய போர் காரணமாக உலகளவில் பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்பு உள்ளது
* வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான, பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்பு உள்ளது
சிறப்பு ஆலோசனை குழு
* 15-வது நிதி குழுவின் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது. ஒன்றிய அரசின் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படும்.முறையான நிதி பகிர்வை ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கவில்லை.
* ஒன்றிய, மாநில நிதி உறவுகளை வழிநடத்த சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும்.
* வானிலையை கணிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
* அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடியும், வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கீடு
* விழுப்புரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
* கொற்கையில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
* போதை பொருட்களை ஒழிக்க அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது; சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
தந்தை பெரியாரின் சிந்தனைகள்
* தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்திடவும், பகுத்தறிவை பரப்பிடவும், பெண் அடிமைத்தனத்தை ஒழித்திடவும் கடைசி மூச்சு இருக்கும் வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார்
* தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட 5 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழ் மொழியை போற்றி உலகெங்கும் பரவ செய்வதே திமுக அரசின் முதன்மையான குறிக்கோள்; திராவிட மாடலின் இலக்கணமாக முதலமைச்சர் திகழ்கிறார்
* தமிழ் மொழி தொடர்பாக அகரமுதலி திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
* நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 10% ஆக உள்ளது.
விவசாயம்
* குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல்; வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
* நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2,787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுகீடு.
* டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு
காவல்துறை ரூ. 10,285 கோடி ஒதுக்கீடு
* சமூக வலைதள பொய் பரப்புரைகளை தடுக்க காவல்துறையில் சமூக ஊடக சிறப்பு மையம்.
* சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும்
* தமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ. 10,285 கோடி ஒதுக்கீடு
தமிழ் வளர்ச்சி
* தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும்
* தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு
* விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம்
* நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.82.86 கோடி
* தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளிக் கல்வி துறை
* பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு;
* இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
* புதிதாக 15 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ. 125 கோடி நிதி ஒதுக்கீடு. அறிவு சார் நகரம் உருவாக்கப்படும், ஆராய்ச்சிப் பூங்கா நிறுவ ஊக்குவிக்கப்படும்
* அரசு பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு
* நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களின் தனித்திறன் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படும்; அதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
* இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.
* அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் கடமை; அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம்.
ஆதிதிராவிடர் நலத்துறை
* ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.4,281 கோடி நிதி ஒதுக்கீடு
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி நிதி ஒதுக்கீடு
* 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ரூ.1,019 கோடி செலவில் புதிய மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்.
* முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி நிதி
* முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு
* காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை மேம்பாட்டிற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு
* உயர்தர மனநல சேவை வழங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு
* பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ . 20 கோடி நிதி ஒதுக்கீடு
* வனப்பகுதியில் வரையாடுகளை பாதுகாக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு.வனத்துறை பரப்பளவை அதிகரிக்க வன ஆணையம் அமைக்கப்படும்
புத்தக கண்காட்சி
* சமூதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது;
* புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சிகள் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி; ஆண்டுக்கு 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும்.
ஒலிம்பிக் தங்க பதக்க தேடல்
* தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்க தேடல் திட்டம் உருவாக்கப்படும்.
* ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வெல்லும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு; வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.
சிங்காரச் சென்னை
* கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு
* சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.7,338.36 கோடி ஒதுக்கீடு.கடந்தாண்டை காட்டிலும் ரூ.4,296.35 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு
*நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 20, 400 கோடி நிதி ஒதுக்கீடு
* அணைகள் புனரமைப்பு, பாதுகாப்புக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு
* சமத்துவபுர வீடுகளை சீரமைக்க ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு
* விளிம்புநிலை பழங்குடியின மக்களுக்கு 443 வீடுகள் கட்ட ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு
* மாற்றுத்திறனாளிகள் நலன் மேம்பாட்டிற்கு ரூ. 838 கோடி நிதி ஒதுக்கீடு
* ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.4,281 கோடி நிதி ஒதுக்கீடு
* தரைப்பாலங்களை உயர்மட்ட மேம்பாலங்களாக மேம்படுத்த ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழக பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.1,314 கோடி ஒதுக்கீடு
தாவரவியல் பூங்கா
* தாவரவியல் பூங்காக்கள், பல்லுயிரினங்களின் இருப்பிடங்களாகவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மையங்களாகவும் திகழ்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, லண்டன் க்யூபூங்கா அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.
* காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கும்.
* தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் “வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை” அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்கு, முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும்.
* சேத்துமடை (கோயம்புத்தூர் மாவட்டம்), மணவணூர் மற்றும் தடியன் குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.
இம்மதிப்பீடுகளில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு ரூ. 849.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ . 20 கோடி நிதி ஒதுக்கீடு
* வனத்துறை பரப்பளவை அதிகரிக்க வன ஆணையம் அமைக்கப்படும்.
Related Tags :
Next Story