சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் பாதித்த மான் உயிரிழப்பு
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மான் ஒன்று ஆந்த்ராக்ஸ் பாதித்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. அதனை ஆய்வு செய்ததில் ஆந்த்ராக்ஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால், வேறு 3 மான்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாவதற்காக வன துறை காத்திருக்கிறது.
அந்த மான்களுக்கும் ஆந்த்ராக்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி. பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் யாரும் மானுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என்று வன துறை அறிவுறுத்தி உள்ளது.
கோவை வன பகுதியில் ஆந்த்ராக்ஸ் பாதிப்புக்கு 35 வயதுடைய ஆண் யானை ஒன்று நேற்று உயிரிழந்து இருந்தது. இந்த நிலையில், சென்னையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
Related Tags :
Next Story