தர்மபுரி: நீர் நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 12 வீடுகளை அகற்றிய அதிகாரிகள்...!


தர்மபுரி: நீர் நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 12 வீடுகளை அகற்றிய அதிகாரிகள்...!
x
தினத்தந்தி 18 March 2022 4:45 PM IST (Updated: 18 March 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே நீர் நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 12 வீடுகளை ஜே.சி.பி மூலம் அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மேக்கலாம்பட்டி என்று ஊர் உள்ளது. இந்த ஊரில் ஏரிகளை ஆக்கிரமித்து பல வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. 

இது தொடர்பான புகார்கள் வந்த நிலையில், மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷிணி நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த  கால அவகாசத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்தனர்.

இதையடுத்து இன்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், மேலாளர் கந்தப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா, தாசில்தார் பாலமுருகன், டி.எஸ்.பி தினகரன், இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் முன்னிலையில் ஜே.சி.பி மூலம் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டது.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால்  ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 12 வீடுகள் அகற்றப்பட்டு உள்ளது. 

Next Story