பாலாற்று மேம்பாலங்களில் 38 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து தொடக்கம்


பாலாற்று மேம்பாலங்களில் 38 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து தொடக்கம்
x
தினத்தந்தி 18 March 2022 7:46 PM IST (Updated: 18 March 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாற்று மேம்பாலங்களில் 38 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து தொடங்கியுள்ளது.

சென்னை,

சென்னையையும் தென் மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்றாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பாலாற்றின் குறுக்கே இரண்டு மேம்பாலங்கள் அமைந்துள்ளன. 

கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக இந்த பாலங்கள் பெருமளவு சேதமடைந்ததால், போக்குவரத்துக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் காரணமாக அங்கு ஒருவழி போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, 38 நாட்களுக்குப் பிறகு பாலாற்று மேம்பாலங்களில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடந்த சீரமைப்பு பணிகளால், வாகனங்கள் சுமார் 45 கி.மீ. சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் அங்கு மீண்டும் போக்குவரத்து தொடங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story