கடந்த நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டின் சராசரி சிமெண்டு விலை குறைவு


கடந்த நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டின் சராசரி சிமெண்டு விலை குறைவு
x
தினத்தந்தி 19 March 2022 1:38 AM IST (Updated: 19 March 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

கடந்த நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டின் சராசரி சிமெண்டு விலை குறைவு என்று தென்னிந்திய சிமெண்டு் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்னிந்திய சிமெண்டு உற்பத்தியாளர்கள் சங்கம் (சிக்மா) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சிமெண்டு விலை குறைவு

கடந்த நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டின் சராசரி சிமெண்டு விலை குறைவு. தமிழகத்தில் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வரும் சிமெண்டு தொழிலை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. சிமெண்டு உற்பத்தி செய்ய எரிபொருள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகிய 3 உள்ளீட்டு செலவுகள் முக்கியமானதாகும்.

கடந்த சில மாதங்களில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை 4 முதல் 5 மடங்கு அதிகரித்துள்ளது. ரஷியா-உக்ரைன் போரின் காரணமாக நிலக்கரி கிடைப்பது என்பதே தற்போது அரிதாகிவிட்டது.

நிலக்கரி இருப்பு

பிளாஸ்டிக் சிமெண்டு பைகளுக்கான செலவு டன்னுக்கு ரூ.80 ஆகிறது. ஒரு சிமெண்டு பைக்கு, போக்குவரத்து செலவு மட்டும் ரூ.80 ஆக இருக்கிறது. இதுதவிர ஜி.எஸ்.டி. வரியும் 28 சதவீதம் சிமெண்டுக்கு விதிக்கப்படுகிறது. எந்த தரப்பில் இருந்தும் எந்த உதவியும் வராத நிலையில், தமிழகத்தில் சிமெண்டு தொழில் நிலைத்திருப்பது கேள்விக்குறியாகியுள்ளது என்பதுதான் உண்மை.

பெரும்பாலான சிமெண்டு கம்பெனிகளில் நிலக்கரி குறைவான அளவே (15 நாட்கள் தேவையை கூட பூர்த்தி செய்யாது) இருப்பு உள்ளது. புதிதாக வரும் நிலக்கரி விலை உயர்த்தப்பட்டது மட்டுமல்ல, அதனை பெறுவதே கடினமாக உள்ளது. நெருக்கடியான இந்த சூழ்நிலையில், தொழில்துறைக்கு உதவுவதற்கான வழிகளை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் பொறுப்பான சிமெண்டு தொழிலை எப்படி வாழ வைப்பது என்பது குறித்து ஒவ்வொருவரும் அக்கறையோடு கவலைப்படவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story