24-ந் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டசபையில் 24-ந் தேதிவரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் 2022-23-ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவைக்கு அளித்தார். அதைத் தொடர்ந்து எனது தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
பட்ஜெட் மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்த வேண்டும்? எத்தனை நாட்கள் சட்டமன்ற கூட்டத் தொடரை நடத்த வேண்டும்? என்பது பற்றி அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பட்ெஜட் மீது விவாதம்
அதன்படி 19-ந் தேதி (இன்று) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 20-ந் தேதி விடுமுறை. 21-ந் தேதி காலை முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளும், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்படும்.
அதைத் தொடர்ந்து பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெறும். 22 மற்றும் 23-ந் தேதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் விவாதம் தொடர்ந்து நடைபெறும். எதிர்க்கட்சித் தலைவரும் விவாதத்தில் பங்கேற்று பேசுவார்.
அமைச்சர்கள் பதிலுரை
24-ந் தேதியன்று நிதித்துறை அமைச்சரும், வேளாண்மைத்துறை அமைச்சரும் இந்த விவாதத்திற்கு பதிலுரை அளிப்பார்கள். முன்னதாக 2022-23-ம் ஆண்டு செலவுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் அவையில் வைக்கப்படும். 2021-22-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை அளிக்கப்படும். இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் துணை மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமசோதா அறிமுகம் செய்யப்பட்டு விவாதமின்றி நிறைவேற்றப்படும்.
2022-23-ம் ஆண்டின் செலவுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். இறுதியில் சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். 24-ந் தேதியுடன் இந்த கூட்டத் தொடர் நிறைவடையும்.
நேரலையாக ஒளிபரப்பு
அனைத்து நாட்களிலும் காலை 10 மணிக்கு சட்டசபை கூடும். 21, 22, 23-ந் தேதிகளில் கேள்வி-பதில் நிகழ்ச்சி உண்டு. 24-ந் தேதி கேள்வி-பதில் கிடையாது. இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி - பதில் நிகழ்ச்சி, அமைச்சர்களின் பதிலுரை ஆகியவை நேரலையாக ஒளிபரப்பப்படும்.
அரசு துறைகளின் மானியக் கோரிக்கைகள் நடக்கும் நாள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். தற்போது அதுபற்றி அரசு ஆலோசித்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தது. அது அவர்களின் ஜனநாயக உரிமை. அலுவல் ஆய்வுக் குழுவிலும் பங்கேற்றனர். சட்டசபையை நடத்துவது பற்றிய வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர். எனவே கூச்சல் குழப்பம் எதுவும் கிடையாது. ஜனநாயக ரீதியில் அவை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story