மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே ரூ.5,770 கோடியில் இரட்டை அடுக்கு உயர்மட்டச்சாலை
மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே ரூ.5,770 கோடியில் இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை வர்த்தக வளர்ச்சிக்கு உயிர்நாடியாக திகழக்கூடிய மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை திட்டத்தை மீட்டெடுத்து, நிறைவேற்ற இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. இத்திட்டம் ரூ.5,770 கோடி மதிப்பீட்டில் 20.6 கி.மீ. நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலையாக அமைக்கப்பட உள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழ்நாடு அரசு, கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும்
கிழக்கு கடற்கரை சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைத்திட, அக்கரை வரை 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்துவது அவசியமாகும். திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் இச்சாலையை அகலப்படுத்துவதற்கு, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூரில் உள்ள மீதமுள்ள சாலைப்பகுதி ரூ.135 கோடி செலவில் 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும்.
மாமல்லபுரத்திற்கு அப்பால் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைப்பது தொடர்பான சிக்கல் தீர்க்கப்பட்டு, 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
வெளிவட்ட சாலை
மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை 62 கி.மீ. நீளமுள்ள வெளிவட்ட சாலையின் கிழக்கு பகுதியில் 50 மீட்டர் அகலமுள்ள நிலம், வளர்ச்சி பெருவழியாக மேம்படுத்தப்படும்.
இந்த பெருவழியை அடுத்துள்ள பகுதிகளில், குடியிருப்பு நகரியம், சிப்காட் தொழிற்பூங்காக்கள், பொழுதுபோக்கு பகுதிகள், சேமிப்பு கிடங்குகள், தோட்டக்கலை பூங்காக்கள், இயற்கை உணவு பதப்படுத்தும் மண்டலம் மற்றும் தயார் நிலையில் உள்ள தொழிற்கூடங்களை அமைத்திட திட்டமிடுவதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பெருவழியில் முழுமையான வளர்ச்சியை அடைய தளப்பரப்பு குறியீடும் உயர்த்தப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story