தி.மு.க. அரசின் ‘பட்ஜெட்’ ஏமாற்றம் அளிக்கிறது ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை


தி.மு.க. அரசின் ‘பட்ஜெட்’ ஏமாற்றம் அளிக்கிறது ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
x
தினத்தந்தி 19 March 2022 4:31 AM IST (Updated: 19 March 2022 4:31 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசின் ‘பட்ஜெட்’ ஏமாற்றம் அளிக்கிறது ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக நிதி அமைச்சரால் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2022-2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஏதோ ஒரு வணிக நிறுவனத்தின் ஆண்டு வரவு-செலவு கணக்கு போல் உள்ளதே தவிர, மக்களின் நலன்களை காக்கும் அறிக்கையாக, மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிக்கையாக, ஏழை-எளிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அறிக்கையாக இல்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிதிநிலை அறிக்கை இலக்கற்றும், எதிர்காலம் குறித்த எந்த தீர்க்கமான பார்வையும் இல்லாமல் இருக்கிறது. மக்கள் நலனுக்கு என்று இந்த நிதிநிலை அறிக்கையில் ஏதுமில்லை. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு இந்த வரவு-செலவுத் திட்டம் எந்த வகையிலும் பயன்படாது. மொத்தத்தில், இது ஓர் ஏமாற்றமளிக்கும் அறிக்கை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story