பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை எஸ்.ஆர்.எம். நகர் புது ஏரிக்கரை பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த 10 பேரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், மடுகரை இந்திரா நகரை சேர்ந்த முருகன் (வயது 40), அய்யப்பன் (37), மடுகரை ஈ.எஸ்.நகரை சேர்ந்த பிரகாஷ் (55) வடிவேல் (43), சத்தியமூர்த்தி (34), குமார் (59), குணசேகரன் (50), உள்பட 10 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story