கன்னியக்கோவிலில் சாலையின் நடுவே தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து
கன்னியக்கோவிலில் சாலையின் நடுவே தடுப்பு சுவரில் லாரி மோதியது.
பாகூர்
திண்டிவனத்தில் இருந்து கருப்பு மண் (எம்.சாண்ட்) ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று புதுச்சேரி வழியாக கடலூருக்கு அதிகாலை 3 மணி அளவில் சென்றது. புதுச்சேரி - கடலூர் சாலையில் கன்னியக்கோவில் பகுதியில் வந்தபோது, சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் லாரி திடீரென்று மோதியது. இதில் லாரியின் முன்பக்க சக்கரத்தின் அச்சு முறிந்தது. மேலும் என்ஜின் சேதமடைந்து அதிலிருந்து ஆயில் கொட்டி, சாலையில் ஓடியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிரேன் மற்றும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் விபத்தில் சிக்கிய லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சாலையில் சிதறி கிடந்த ஆயிலை அகற்றினர்.
இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயங்களுடன் தப்பினார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியக்கோவில் பகுதியில் சாலையோரம் மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Related Tags :
Next Story