கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 1-ந்தேதி முதல் மீண்டும் இயக்கம்


கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 1-ந்தேதி முதல் மீண்டும் இயக்கம்
x
தினத்தந்தி 20 March 2022 5:44 AM IST (Updated: 20 March 2022 5:44 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 1-ந்தேதி முதல் மீண்டும் இயக்கம்

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா காலக்கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படுகிறது.

*திருப்பதி-புதுச்சேரி(வண்டி எண்:16111) இடையே காலை 4.20 மணிக்கும், மறுமார்க்கமாக புதுச்சேரி-திருப்பதி(16112) இடையே மதியம் 2.55 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும்.

*சூலூர்பேட்டை-நெல்லூர்(06747) இடையே மதியம் 3.50 மணிக்கும், மறுமார்க்கமாக நெல்லூர்-சூலூர்பேட்டை(06748) இடையே மாலை 6.50 மணிக்கும், திருவனந்தபுரம் சென்டிரல்-நாகர்கோவில்(06433) இடையே காலை 6.50 மணிக்கும், மறுமார்க்கமாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் சென்டிரல்(06428) இடையே மாலை 6.20 மணிக்கும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை(06743) இடையே மதியம் 1.15 மணிக்கும், மறுமார்க்கமாக சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட்(06744) இடையே இரவு 8.45 மணிக்கும் புறப்படும். முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story