தாம்பரம்-நாகர்கோவில் அந்யோதயா எக்ஸ்பிரஸ் - அதிவேக ரெயிலாக மாற்றம்
தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 14-ந்தேதி முதல் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 14-ந்தேதி முதல் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்
தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை இயக்கப்பட்டு வந்த அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்யோதயா ரெயில் நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழிகாக தாம்பரம் வந்தடைகிறது. தற்போது எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் 14 தேதி முதல் அதிவேக எக்ஸ்பிரஸ் (சூப்பர் பாஸ்ட்) எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியதாவது,
தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம்(வண்டி எண்: 16191/16192) இடையே இயக்கப்பட்டு வந்த அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி முதல், வேகம் அதிகரிக்கப்பட்டு, தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம்(20691/20692) இடையே அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படும்.
இந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல இரவு 11 மணிக்கு புறப்படும். ஆனால், நாகர்கோவிலுக்கு மறுநாள் மதியம் 2.20 மணிக்கு பதிலாக, மதியம் 12.50 மணிக்கு வந்து சேரும்.
இதேபோல், மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து 3.45 மணிக்கு பதிலாக 3.50 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 5.50 மணிக்கு பதிலாக 5.40 மணிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story