மேலும் ஒருவருக்கு கொரோனா
புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 249 பேருக்கு கொரோானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மாகியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 13 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இ்ன்று ஒருவர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று பரவல் 0.40 சதவீதமாகவும், குணமடைவது 98.81 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 533 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,307 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 62 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 12 ஆயிரத்து 765 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Related Tags :
Next Story