கொரோனா 4-வது அலை குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கொரோனா 4-வது அலை குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
கொரோனா 4-வது அலை குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு 100க்கும் குறைவாக உள்ளது. இறப்பு பூஜ்யம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா 4வது அலை தீவிரமாக பரவி வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட 740 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி இறப்பு 59 பேர் என உள்ளது. எனவே தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story