சரியான நம்பர் பிளேட்டுகள் இல்லாத வாகனங்கள் மீது வழக்குப்பதிவு


சரியான நம்பர் பிளேட்டுகள் இல்லாத வாகனங்கள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 March 2022 12:21 AM IST (Updated: 21 March 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

சரியான நம்பர் பிளேட்டுகள் இல்லாத வாகனங்கள் மீது வழக்குப்பதிவு.

சென்னை,

சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் இருப்பதாகவும், நம்பர் பிளேட்டுகளின் அளவும், அதில் உள்ள எழுத்துகளின் அளவும் மிகவும் சிறியதாக இருப்பதாகவும் புகார்கள் வந்தன. இதனால் அதுபோன்ற வாகனங்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.

இதன்பேரில் கடந்த 2 நாட்களாக சென்னையில் போக்குவரத்து போலீசார் 73 இடங்களில் வாகன சோதனை நடத்தி, சரியான நம்பர் பிளேட்டு இல்லாத வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வகையில் 2,306 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story