தமிழக இளைஞர்களுக்காக கல்வி தொலைக்காட்சி மூலம் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்
தமிழக இளைஞர்களுக்காக கல்வி தொலைக்காட்சி மூலம் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை,
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் சார்பில் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக, கல்வி தொலைக்காட்சி மூலமாக அரசு பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் இளைஞர்கள் அரசுத்துறை பணிகளை பெற மேலும் சிறப்பாகவும் எளிய வழிமுறையிலும் அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கையாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறையுடன் இணைந்து போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித்தொலைக்காட்சி மூலம் தொடர்ந்து ஒளிப்பரப்ப உள்ளது.
போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு
இப்பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், வங்கி தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம் போன்ற பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான கட்டணமில்லா பயிற்சியுடன் ஊக்கப்படுத்தும் உரைகள், ஆளுமை வளர்ச்சி, நேர்முக தேர்வுக்காக தயார் செய்தல், கலந்துரையாடல்கள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை கூர்ந்து ஆய்வு செய்தல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மறுஒளிபரப்பாக மாலை 7 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும்.
பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகமாக வெற்றி பெற இந்த முயற்சி வழிவகுக்கும். தமிழ்நாட்டின் தொலைதூரத்தில் வசிக்கும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் பயன் அளிக்கும்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story