கடலில் நீச்சல் அடித்து சிறுமி சாதனை போலீஸ் டி.ஜி.பி. நேரில் பாராட்டு


கடலில் நீச்சல் அடித்து சிறுமி சாதனை போலீஸ் டி.ஜி.பி. நேரில் பாராட்டு
x
தினத்தந்தி 21 March 2022 1:36 AM IST (Updated: 21 March 2022 1:36 AM IST)
t-max-icont-min-icon

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீச்சல் அடித்து சிறுமி சாதனை போலீஸ் டி.ஜி.பி. நேரில் பாராட்டு.

ராமேசுவரம்,

மும்பையில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் பணிபுரிபவர் மதன்ராய். இவரது மனைவி ரெஜினா ராய். இவர்களது மகள் ஜியாராய் (வயது 13). பேச்சு திறனற்ற மாற்றுத்திறனாளியான இந்த சிறுமி இலங்கை தலை மன்னார்-தனுஷ்கோடி வரை கடலில் நீச்சல் அடித்து சாதனை புரிவதற்காக நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர் அங்கிருந்து நேற்று சிறுமி ஜியாராய் நேற்று தலைமன்னார் ஊர்மலை என்ற கடல் பகுதியில் இருந்து அதிகாலை 4.22 மணியளவில் நீச்சல் அடிக்க தொடங்கினார். நேற்று மாலை 5.32 மணிக்கு தனுஷ்கோடி கடற்கரை பகுதிக்கு வந்தடைந்து 13 மணி நேரம் 10 நிமிடத்தில் சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு பூங்கொத்து கொடுத்தும், சந்தனமாலை அணிவித்தும் நேரில் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

Next Story