அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 14-ந்தேதி முதல் அதிவேக ரெயிலாக மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தாம்பரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் 14-ந்தேதி முதல் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை,
தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை இயக்கப்பட்டு வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்தியோதயா ரெயில் நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடைகிறது.
இந்த நிலையில், கொரோனா கால கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது ஏப்ரல் 14-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும், எக்ஸ்பிரஸாக இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில், அதிவேக எக்ஸ்பிரஸ் (சூப்பர் பாஸ்ட்) ரெயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
வேகம் அதிகரிப்பு
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் (வண்டி எண்: 16191/16192) இடையே இயக்கப்பட்டு வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி முதல், வேகம் அதிகரிக்கப்பட்டு, தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் (20691/20692) இடையே அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படும்.
இந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல இரவு 11 மணிக்கு புறப்படும். ஆனால், நாகர்கோவிலுக்கு மறுநாள் மதியம் 2.20 மணிக்கு பதிலாக, மதியம் 12.50 மணிக்கு வந்து சேரும். இதேபோல், மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு பதிலாக 3.50 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 5.50 மணிக்கு பதிலாக 5.40 மணிக்கு வந்து சேரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story