கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி...!


கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி...!
x
தினத்தந்தி 21 March 2022 1:00 PM IST (Updated: 21 March 2022 12:51 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் இன்று வந்தார். தனது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுக்க காத்திருந்த அவர் திடீர் என்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் அவரை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆவின் பால் பூத் வைக்க வங்கிய வங்கி  கடனை ரத்து செய்ய வலியுறுத்தி அவர் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story