லக்‌ஷயா சென்னுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!


லக்‌ஷயா சென்னுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
x
தினத்தந்தி 21 March 2022 6:55 PM IST (Updated: 21 March 2022 6:55 PM IST)
t-max-icont-min-icon

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் வெள்ளி வென்ற லக்‌ஷயா சென்னுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,
 
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் இந்தியாவின் லக்‌ஷயா சென், நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென்னுடன் (டென்மார்க்) பலப்பரீட்சை நடத்தினார்.

தொடக்கம் முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆக்சல்சென் 21-10, 21-15 என்ற நேர் செட்டில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். லக்‌ஷயா சென்னுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இந்த நிலையில் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி வென்ற லக்‌ஷயா சென்னுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பதிவில் அவர், ' இந்த இளம் வயதிலேயே ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் லக்‌ஷயா சென் சாதித்திருப்பது மிகவும் பெருமை.

மதிப்புமிக்க ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டியை எட்டிய ஐந்தாவது இந்தியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு மிக அருகில் வந்து தவறவிட்டுள்ளார். அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.

Next Story