சைக்கிள் வாடகைக்கு விடும் திட்டம் தொடக்கம்
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் வாடகைக்கு விடும் திட்டம் சோதனை இன்று தொடங்கப்பட்டது.
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் வாடகைக்கு விடும் திட்டம் சோதனை இன்று தொடங்கப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு சில திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் புதுச்சேரி பாரதி பூங்கா அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒன்றான சைக்கிள் வாடகைக்கு விடும் திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. இதற்கு உறுப்பினராக விரும்புவோர் மாத கட்டணமாக ரூ.249-ம், 3 மாத கட்டணமாக ரூ.499-ம் செலுத்த வேண்டும். இதற்கு இலவசமாக சைக்கிள் ஓட்ட முடியும். மேலும் உறுப்பினர்களுக்கு அரை மணி நேரத்துக்கு கட்டணமாக ரூ.5-ம், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ரூ.10-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சோதனை முறையில் சைக்கிள் வாடகை விடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சைக்கிள் வாடகைக்கு விடும் திட்டம்
புதுவையில் முக்கியமான சுற்றுலா தலங்கள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 44 இடங்களில் சைக்கிள் நிறுத்தும் மையம் அமைக்கப்பட்டவுடன் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என ஸ்மார்ட் சிட்டி அதிகாரி தெரிவித்தார்.
இதுபற்றி அரசு தரப்பு அதிகாரிகள் கூறுகையில், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் சைக்கிள் வாடகைக்கு விடும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. புதுவையில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு சைக்கிள் வாடகை திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவருக்கு விளக்கம் கேட்டு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story