மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம்: ஜி.கே.வாசன் வரவேற்பு

சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை தமிழக டெல்டா விவசாயிகள் சார்பாக வரவேற்கிறேன். மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் உண்மை நிலைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதிக்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் மேகதாதுவில் அணைகட்ட வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தையும், வாழ்வாதாரத்தையும் மிகவும் பாதிக்கும். எனவே இரு மாநிலங்களின் நல்லுறவு மற்றும் கூட்டாட்சி தத்துவம், உண்மை நிலைக்கு ஏற்றவாறு கர்நாடக காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story