தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைத்தவர் கைது
தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைத்தவர் கைது ரெயில் மோதியதை வீடியோவாக படம் பிடித்தார்.
நாகர்கோவில்,
சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 19-ந்தேதி இரவு குமரி மாவட்டம் பாலோடு பகுதியில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறாங்கற்கள் மீது ரெயில் பலமாக மோதி விட்டு அந்த பகுதியை கடந்து சென்றது.
அதிர்ஷ்டவசமாக ரெயில் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் உயிர் தப்பினர். பாறாங்கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க நடந்த சதி என ரெயில்வே போலீசார் முடிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ஆலஞ்சி பாறவிளை பகுதியை சேர்ந்த லெனின் என்ற சூரியா (வயது 24) என்ற வாலிபர் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் கொத்தனாரான அவர் தண்டவாளத்தில் பெரிய கல்லை வைத்தால் ரெயில் தடம் புரளுமா? அல்லது கல் உடைபடுமா? என்று சோதித்து பார்க்க முடிவு செய்து 2 பெரிய பாறாங்கற்களை தூக்கி வந்து தண்டவாளத்தில் வைத்ததும், பின்னர் ரெயில் பாறாங்கற்கள் மீது மோதும் காட்சியை வீடியோவாக பதிவு செய்ததும் தெரியவந்தது.

Related Tags :
Next Story