தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது ஏன்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது ஏன்? என்பதற்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது சிதம்பரம் எம்.எல்.ஏ. கே.ஏ.பாண்டியன் (அ.தி.மு.க.), “இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. ஏழை, எளிய மக்களின் வாட்டத்தை போக்க புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. பெண்களின் திருமண கனவை நனவாக்கும் தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது’’ என்று பேசினார். அதற்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்து பேசினார்.
அ.தி.மு.க. அரசு நிறுத்தியது
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு பேசியதாவது:-
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலே நிறைவேற்றப்பட்டு கொண்டிருந்த திட்டம்தான் இந்த திருமண உதவி திட்டம். அதைப் பற்றி நிதித்துறை அமைச்சர் மிக விளக்கமாக பேசினார். இருந்தாலும், அதையொட்டி நான் கொஞ்சம் அழுத்தம் தந்து, அதில் நீங்கள் தெளிவு பெறவேண்டும், நீங்கள் மட்டுமல்ல நாட்டு மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சில விளக்கங்களை சொல்ல விரும்புகிறேன்.
1989-ல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம் என்ற பெயரிலே தொடங்கப்பட்டபோது முதன் முதலில் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. பிறகு, 2009-ம் ஆண்டில் அது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. முதலில், ஒருமுறை இந்த திருமண உதவி திட்டத்தை அ.தி.மு.க. அரசு நிறுத்தியது.
பின்னர் அதனுடைய முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, 17-5-2011 அன்று ஆட்சிக்கு வந்தபோது, திருமண உதவியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, தாலிக்கு தங்கம் 4 கிராம் என்பதை 8 கிராம் என்ற நிலையிலே உயர்த்தி, அதை 2016-ம் ஆண்டிலிருந்து நிறைவேற்றிக்கொண்டிருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி இப்போது ஆய்வு செய்து அதுபற்றி நிதி அமைச்சர் இங்கே சொன்னார்.
குறைபாடுகள்
அந்த ஆய்வில், 24.5 சதவீத பயனாளிகள் மட்டுமே தகுதியான பயனாளிகள் என்று கண்டறியப்பட்டது. அது தவிர, மாநில கணக்காய்வு தலைவரின் அறிக்கையில், இந்த திட்டம் குறித்து பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இத்திட்ட பயனாளிகளுக்கு நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்குவதில் முறைகேடுகள் செய்தவர்கள் மீது, இதுவரை 43 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்து, 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்குமேல் இந்த திட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள், முறைகேடுகளை விளக்கி கூறி, திருமண உதவி திட்டத்தை, தயவுசெய்து கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
மாற்றம் ஏன்?
அதே நேரத்தில், உயர்நிலைக்கல்வியில் பெண்கள் சேருவது 46 சதவிகிதம் மட்டுமே இருப்பதால், அதை சரிசெய்து, கல்வியே நிரந்தர சொத்து என்ற உயரிய நோக்கில்தான் தாலிக்கு தங்கம் வழங்கக்கூடிய திட்டம், “6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
திருமண தகுதி வருவதற்கு முன்பே, ஒரு பெண்ணுக்கு கல்வி தகுதியை, கல்வி என்ற நிரந்தர சொத்தை வழங்க வேண்டும் என்ற பெண்ணுரிமை கொள்கையின் மறுவடிவம்தான் இந்த “நிதியுதவி வழங்கக்கூடிய திட்டம்”.
திருமண உதவி திட்டத்தின்கீழ், ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பெண்கள் பயனடைந்தார்கள். ஆனால், இந்த ஆயிரம் ரூபாய் கல்வி உதவி திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள்.
வரவேற்க வேண்டும்
சமூக நீதி, பெண் கல்வி, நிலைத்த நீண்ட பலன், நவீன சிந்தனை, இடைத்தரகர்கள் இன்றி மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படுவது என்பது ஒரு வெளிப்படையான, அதே சமயத்தில் பெண்கள் அதிக அளவில் கல்வி தகுதி பெறுவதற்கு வித்திடக்கூடிய திட்டமாக இந்த திட்டம் அமைந்திருக்கிறது.
எனவே, கட்சி பாகுபாடின்றி, வேறுபாடின்றி இந்த திட்டத்தை அனைவரும் வரவேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலகாரணம்
அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி, “இந்த திட்டத்தின் பயனைப் பெற 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதையும் அரசு அனுமதிக்க வேண்டும்” என்று கோரினார்.
அதற்கு பதில் அளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கோட்பாடுகளே நிறைவேறவில்லை. தவறான சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளன. அதில் நடந்த 12 பிழைகளை மத்திய தணிக்கைத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே அந்த திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டது.
அந்தந்த தேதியில் தாலிக்கு தங்கம் வழங்கியிருந்தால் குளறுபடிகள் வந்திருக்காது. திருமணமாகி 4 ஆண்டுகளாக காலதாமதம் செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. அந்த திட்டத்தை மாற்றியமைக்க அதுதான் மூலகாரணமே தவிர, உங்கள் திட்டம் என்று அதை அழிக்க நாங்கள் நினைக்கவில்லை” என்று கூறினார்.

Related Tags :
Next Story