ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை: ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம்
ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 2-வது நாளாக இன்று ஆஜராகியுள்ளார். விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தியது.
அப்போது ஓ. பன்னீர் செல்வம் அளித்த பதிலில்,“ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை; பொதுமக்களிடயே கருத்து வலுத்ததால் நான் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தேன். தனிப்பட்ட முறையில் சசிகலா மீதும் மரியாதையும் அபிமானமும் இப்போது வரை உள்ளது” என்றார்.
Related Tags :
Next Story