ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு


ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு
x
தினத்தந்தி 22 March 2022 5:33 PM IST (Updated: 22 March 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

கடந்த இரு நாட்களில் 9 மணி நேரம் நடந்த விசாரணையில் 150க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து வந்தார். அந்த வகையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக இதுவரை 8 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் இதுவரை ஆஜராக முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் இயங்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 78 கேள்விகள் கேட்கப்பட்டது. 

இந்த நிலையில், 2-ஆம் நாளாக இன்று ஓ பன்னீர் செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். ஓ பன்னீர் செல்வத்திடம் சசிகலா தரப்பு இன்று குறுக்கு விசாரணை நடத்தியது. அப்போது  பரபரப்பான பல்வேறு வாக்குமூலத்தை ஓ. பன்னீர் செல்வம் அளித்தார். 

ஓ.பன்னீர் செல்வத்திடம் நடைபெற்ற விசாரணை இன்று நிறைவு பெற்றுள்ளது. 2 நாட்களில் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.ஆணையம் தரப்பில் 120 கேள்விகளும், சசிகலா தரப்பில் 34 கேள்விகளும் அப்பல்லோ தரப்பில் 11 கேள்விகளும்   ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்கப்பட்டுள்ளது. 

Next Story