முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை : ஓ. பன்னீர்செல்வம் பேட்டி


முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை : ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 22 March 2022 6:28 PM IST (Updated: 22 March 2022 6:28 PM IST)
t-max-icont-min-icon

தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் எனக்கு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றும் இன்றும் ஆஜர் ஆனார்.  இரு நாட்களிலும் சுமார் 9 மணி நேரம் ஓ. பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. 

விசாரணையின் போது ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான பல்வேறு வாக்குமூலங்களை அளித்தார். விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது: -  ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளேன். 

ஆறுமுகசாமி ஆணையம் 7 முறை எனக்கு சம்மன் அனுப்பியது. முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை.  எனக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உண்டு”என்றார்.

Next Story