மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி


மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 22 March 2022 7:23 PM IST (Updated: 22 March 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குப் பின்பு மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

சென்னை, 

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குப் பின்பு மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்கள் விவாதம்  நடைபெற்றது. அசோக்குமார் (கிருஷ்ணகிரி, அ.தி.மு.க.) பேசியபோது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல அறிவிப்புகள், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதாக அறிவித்தும் அதை பட்ஜெட்டில் சேர்க்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு அளித்த பதில் வருமாறு:-

மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசினார். முதன் முதலாக மக்கள் நலப் பணியாளர்களை நியமித்தது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிதான். உங்கள் ஆட்சியில் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள். அதன் பிறகு அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பணியை கேட்டனர். 

அவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளது. அங்கு வழக்கு முடிவுக்கு வந்த பிறகு நிச்சயமாக வேலை வாய்ப்பை வழங்குவோம்”  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story