விருதுநகர் பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல் அமைச்சர் உத்தரவு -டிஜிபி
அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்
மேலும் வழக்கில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து ஆணை .பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,
டிஎஸ்பி அர்ச்சனாவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் ,
ஐஜி அஸ்ரா கார்க் ,டிஜிஜி பொன்னி மேற்பார்வையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்
வழக்கில் முக்கிய நபரான ஹரிகரன் ,மாடசாமி ,ஜீவத் அகமது உள்ளிட்ட 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Related Tags :
Next Story