பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி


பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி
x
தினத்தந்தி 22 March 2022 11:25 PM IST (Updated: 22 March 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

புதுவை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி காவல்துறையின் சார்பில்,   கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஒரு மாத காலம் தற்காப்பு கலை மற்றும் சிலம்பம் விளையாட்டு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சியானது தினமும் மாலை 5.15 மணி முதல் 6.15 மணிவரை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் (81247 30030) மற்றும் காவலர் நாதமணி (9787464317) ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story