நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டப்படும் விஷால்-கார்த்தி பேட்டி
நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டப்படும். கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் ரூ.21 கோடி தேவைப் படுகிறது என்று விஷால், கார்த்தி கூறினார்கள்.
சென்னை,
நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். நடிகர் சங்க மூத்த உறுப்பினர்கள் மணி அய்யர், ஊட்டி மணி ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
முன்னதாக நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
நடிகர் சங்க கட்டிடம்
நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக வழக்குகளை எதிர்கொண்டு மூன்று வருடம் போராடி இருக்கிறோம். வழக்குகள் தொடராமல் இருந்திருந்தால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து இருப்போம். ஏற்கனவே 60 சதவீதம் கட்டிட பணிகள் முடிந்துள்ளன. மீதி பணிகளை முடிக்க மேலும் ரூ.21 கோடி தேவைப்படும்.
முதல்-அமைச்சர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
சென்னையின் அடையாளம்
நடிகர் சங்க கட்டிட பணிகள் விரைவில் தொடங்கப்படும். கட்டிடத்தை கட்டி முடிப்பதே எங்கள் முதல் பணி. அந்த கட்டிடம் சென்னையின் முக்கிய அடையாளமாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story