சமையல் கியாஸ் விலை உயர்வுக்கு இல்லத்தரசிகள் கண்டனம்
சமையல் கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த இல்லத்தரசிகள், சிலிண்டர்களை திரும்ப ஒப்படைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை,
சமையல் கியாஸ் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளதற்கு இல்லத்தரசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:-
ராதா ஆனந்த் (வில்லிவாக்கம்):- வீட்டு உபயோக சிலிண்டர் விலை 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.530 என்ற அடிப்படையில் விலையும், ரூ.150 மானியமும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இரண்டு மடங்கு விலை உயர்ந்ததுடன், மானியமும் வெறும் ரூ.25 மட்டும் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. அதுவும் பலருக்கு கிடைக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.
கொரோனா காலத்தில் இருந்து தற்போதுதான் மீண்டு வரும் நிலையில் இவ்வாறு விலையை ஏற்றுவது சரியில்லை. மத்திய - மாநில அரசுகள் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலன் கருதி விலைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
5 மாநில தேர்தலுக்குபிறகு...
சரோஜா (சாலிகிராமம்):- பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இந்த விலை ஏற்றத்தின் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயரும் என எதிர்பார்த்தோம். அதேபோல் நடந்துவிட்டது. நடுத்தர வர்க்கத்தினரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலிண்டர்களை திரும்ப ஒப்படைப்போம்
உமா பரமேஸ்வரி (புளியந்தோப்பு):- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலையை இப்படியே மாதந்தோறும் ஏற்றிக்கொண்டே போனால், எங்களை போன்ற நடுத்தர வர்க்கத்தினர் சிலிண்டர்களை எண்ணெய் நிறுவன முகவர்களிடம் திரும்ப ஒப்படைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. மீண்டும் விறகு அடுப்பில் சமையல் செய்யவும் தயார் நிலையில் இருக்கிறோம். இதுதொடர்பாக மகளிர் அமைப்புகளிடம் பேசி முடிவெடுப்போம்.
அருணா சந்திரசேகரன் (திருவான்மியூர்):- சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமானது கியாஸ் சிலிண்டர். ஆனால் இப்படி சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்தால், இல்லத்தரசிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.710 ஆக இருந்த சிலிண்டர் விலை கடைசியாக அக்டோபர் மாதத்தில் ரூ.915.50 ஆக இருந்தது. இப்போது 50 ரூபாய் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பொருட்கள் விலை உயர்ந்தால் அதன் பயன்பாட்டை குறைத்து கொள்ளலாம். ஆனால் கியாஸ் சிலிண்டர் மட்டும் எவ்வளவு விலை உயர்ந்தாலும் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. இனி சென்னை போன்ற நகர்ப்புறங்களில் விறகு அடுப்புக்கும் திரும்பி போக முடியாது. மற்ற உணவு பொருட்களுக்குகூட இவ்வளவு விலை உயர்வு இல்லாத நிலையில், இந்த அபரிமிதமான கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை தாங்கவே முடியாது. இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்.
இல்லத்தரசி கீதா சீனிவாசன்:- உண்மையிலேயே மிகவும் மன வேதனையுடன்தான் இருக்கிறோம். நேற்று (நேற்று முன்தினம்) கியாஸ் சிலிண்டர் ‘புக்’ செய்தேன். அப்போது விலை ரூ.915 என்று தான் இருந்தது. இன்று (நேற்று) காலை கியாஸ் சிலிண்டர் வீட்டுக்கு வந்தது. வெளியே விளையாட சென்ற குழந்தை பிரச்சினையுடன் வீட்டுக்கு வருவது போல, கியாஸ் சிலிண்டரும் ஒரு பிரச்சினையுடன் வந்தது. வழக்கமான பிரச்சினைதான். அதுதான் ரூ.50 விலை உயர்வு. மேலும் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருவோருக்கு ரூ.50 படியளக்க வேண்டியுள்ளது. இதற்கு பேசாமல் விறகு அடுப்புகூட பயன்படுத்தி விடலாம் போல... மக்கள் படும் வேதனையை என்னவென்று சொல்ல?.
அதிகாரிகள் பதில்
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Related Tags :
Next Story