கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105-க்கு விற்பனை வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் எதிரொலியாக, நாடு முழுவதும் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் எதிரொலியாக, நாடு முழுவதும் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று காலை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.7-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.73-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
திடீர் விலை உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சுற்றுலா வாகன ஓட்டிகள் கூடுதல் வாடகை வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தரைப்பகுதியில் இருந்து மலைப்பகுதிக்கு கொண்டு வரப்படுகிற கட்டுமான பொருட்கள், சமையல் எண்ணெய், காய்கறிகள் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் நலனை கருத்தில் கொண்டு கொடைக்கானல் மலைப்பகுதியில் உயர்த்தப்பட்ட பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story