505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது- முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்


505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது- முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 March 2022 1:53 PM IST (Updated: 23 March 2022 1:53 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் விரிவான பதிலுரை வழங்கினார்.

சென்னை

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு சட்டசபையில்  முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் விரிவான பதிலுரை வழங்கினார். 

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நிவாரண நிதி, பால் விலை குறைப்பு, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும் அறிவிப்பு போன்ற 5 அறிவிப்புகளுக்கு ஆட்சி பொறுப்பேற்ற சில நிமிடங்களில் கையெழுத்திட்டேன்.  5-ல் முதல் 4 வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் .

கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணம், முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு போன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், அரசு பொறுப்பேற்ற 10 மாதங்களில் 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது அனைத்து வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும்.

ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், ரூ.4,000 நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

இது எனது அரசல்ல, நமது அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன .

அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்களை பட்டியலிட்ட  அவர், சென்னை - குமரி இடையேயான சாலை திட்டம், வீடில்லாத ஏழைகளுக்கு 3 சென்ட் நிலம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

ரூ.92,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை. ரூ.9,740 கோடி மதிப்புள்ள 20 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை.

அம்மா வங்கி அட்டை போன்ற அறிவிப்புகளும் நடைமுறைக்கு வரவில்லை. ரூ.5,469 கோடி மதிப்பிலான 26 திட்டங்கள் கைவிடப்பட்டன. ரேசன் கார்டுகளுக்கு செல்லிடப்பேசி, இலவச வைபை திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆனால், தி.மு.க. ஆட்சியைப் பார்த்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க.வினர் கூறுவது, பத்து மாதக் குழந்தையிடம் வந்து பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை கேட்பது போல உள்ளது என கூறினார்.

Next Story