ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்கு தெரிந்த உண்மை ,ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரிய வந்துள்ளது -சசிகலா
ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்கு தெரிந்த உண்மை ,ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரிய வந்துள்ளது என சசிகலா கூறினார்.
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா கூறியதாவது ;
என் மீது தனிப்பட்ட முறையில் மதிப்பு இருக்கிறது என ஓ.பன்னீர் செல்வம் உண்மையை கூறியிருக்கிறார் .ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பி.எஸ்- க்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரியவந்துள்ளது.
உண்மையை மாற்றவோ ,திரையிட்டு மறைக்கவோ முடியாது .மக்களுக்கு உண்மை தெரியவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது ,ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட போது நானும் அதை வரவேற்றேன் என கூறினார்.
அ.தி.மு.க.வில் இணைவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சசிகலா அ.தி.மு.க தரப்பிடமிருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை ,அழைப்பு வராதது குறித்து எந்த வருத்தமும் இல்லை என கூறினார்.
Related Tags :
Next Story