நீண்ட இழுபறிக்குப் பின் போலீஸ் தேர்வு முடிவு வெளியீடு


நீண்ட இழுபறிக்குப் பின்  போலீஸ் தேர்வு முடிவு வெளியீடு
x
தினத்தந்தி 23 March 2022 10:46 PM IST (Updated: 23 March 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

நீண்ட இழுபறிக்குப் பின் புதுச்சேரி போலீஸ் தேர்வு முடிவுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.

நீண்ட இழுபறிக்குப் பின் புதுச்சேரி போலீஸ் தேர்வு முடிவுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.
இழுபறி
புதுச்சேரி காவல்துறையில் 390 போலீஸ் பணியிடங்களை நிரப்பவதற்கான எழுத்து தேர்வு கடந்த 19-ந் தேதி நடந்தது. இதில் 2 ஆயிரத்து 644 பேர் கலந்துகொண்டு எழுதினர். 
இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 21-ந் தேதி நள்ளிரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனவே இளைஞர்களும், இளம்பெண்களும் அன்றைய தினம் இரவு முதல் மறுநாள் காலை வரை கடற்கரை சாலையில் காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு காத்திருந்தனர்.
ஆனால் அறிவித்தபடி அன்றையதினம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதிலும் இழுபறியே நீடித்தது.
அதிகாலையில் வெளியீடு
இந்தநிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் காவலர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பட்டியலை போலீஸ் டி.ஐ.ஜி. மிலிந்த் தும்ரே வெளியிட்டார். 
காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டது. 2 நாட்களாக காத்திருந்த இளைஞர்கள் தேர்வு முடிவுகளை பார்த்தனர்.
புதுவை மாநிலத்தில் பார்த்தசாரதி 112.75 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். ஆண் காவலர்களுக்கு பொதுப்பிரிவில் 133 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 47 பேரும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 28 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 42 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவில் 5 பேரும், முஸ்லிம் இடஒதுக்கீட்டில் 5 பேரும், அட்டவணை பழங்குடியினர் பிரிவில் ஒருவரும், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் பிரிவில் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெண் காவலர்களுக்கு பொதுப்பிரிவில் 66 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 23 பேரும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 14 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 20 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவில் 2 பேரும், முஸ்லிம் ஒதுக்கீட்டில் 2 பேரும், அட்டவணை பழங்குடியினர் பிரிவில் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியல்
இதேபோல் காத்திருப்போர் பட்டியலில் பொதுப்பிரிவில் 42 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 15 பேரும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 9 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 14 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவில் 2 பேரும், முஸ்லிம் இடஒதுக்கீட்டில் 2 பேரும், அட்டவணை பழங்குடியினர் பிரிவில் ஒருவரும், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் பிரிவில் ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி விரைவில் நடைபெறும். சரியான சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டாலும், தேர்வு பெற்றவர்கள் பணியில் சேராவிட்டாலும் காத்திருப்போர் பட்டியலில் இருப்போருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story