மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு


மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 23 March 2022 11:37 PM IST (Updated: 23 March 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

யோகாவில் உலக சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

முதலியார்பேட்டை ராமலிங்க சுவாமி கோவில் மடத்தில் அருள் ஜோதி வள்ளலார் யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தின் மாணவ-மாணவிகள் யுனிவர்சல் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 10 நிமிடங்களில் 10 யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்தனர். மேலும் இந்த மையத்தில் பயின்ற 20 பேர் கொண்ட குழுவினர், பதஞ்சலி காலேஜ் ஆப் ரிசர்ச் சென்டர் மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றனர். இதற்காக இந்த யோகா மையத்துக்கு தங்கதாரகை விருது வழங்கப்பட்டது. 
உலக சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா ராமலிங்க சுவாமி கோவில் மடத்தில் நடந்தது. விழாவுக்கு புதுவை சமரச சுத்த சன்மார்க்க சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். யோகா மையத்தின் நிறுவனரும், அறங்காவலருமான கோபாலகிருஷ்ணன், கடலூர் தமிழ் சங்க தலைவர் குழந்தை வேலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் பாராட்டினர்.
விழாவில் புதுச்சேரி சன்மார்க்க செயலாளர் சீதாலட்சுமி, மகளிர் சங்க தலைவர் ஜெயலட்சுமி, வக்கீல் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை யோகா பயிற்சி மையத்தின் ஆசிரியர் ராஜசேகர் செய்திருந்தார்.


Next Story