ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்


ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 24 March 2022 12:21 AM IST (Updated: 24 March 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு.

சென்னை,

சென்னை பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றிய தணிகாசலம் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2004-ம் ஆண்டு சீருடையில் இரவு பணிக்கு வந்தபோது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தன்னை தகாத வார்த்தைகளில் தரக்குறைவாக திட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து தாக்கினார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், ‘சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதில் காவல்துறைக்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட ஊர்க்காவல் படையினரை லஞ்சம் வாங்குவது உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். தணிகாசலத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அவருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.1 லட்சத்தை 2 மாதத்துக்குள் வழங்கிவிட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம்' என்று உத்தரவிட்டார்.

Next Story