கேரள அரசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து சட்டசபையில் தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்


கேரள அரசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து சட்டசபையில் தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 March 2022 12:27 AM IST (Updated: 24 March 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து சட்டசபையில் தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்.

சென்னை,

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

மேகதாது அணை குறித்து பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசின் அத்துமீறல் குறித்தும் நிதிநிலை அறிக்கையில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பேபி அணையை வலுப்படுத்தவும் ஏதுவாக, அங்குள்ள மரங்களை வெட்டவும், கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல பாதை அமைக்கவும், தொடர்ந்து கேரள அரசு மறுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல், கேரள மந்திரிகளும், அதிகாரிகளும், தன்னிச்சையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது, தன்னிச்சையாக ஆய்வு செய்வது, முல்லைப் பெரியாறு அலுவலகத்தைப் பராமரிக்கத் தேவையான தளவாடப் பொருட்களைக்கூட எடுத்துச் செல்ல இடையூறு ஏற்படுத்துவது என தொடர்ந்து கேரள அரசு அத்துமீறி செயல்படுகிறது. கேரள அரசின் சட்டத்திற்கு புறம்பான இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு உடனுக்குடன் தட்டிக் கேட்க வேண்டும். கேரள அரசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story