சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் திடீர் போராட்டம்
கங்கை கொண்டானில் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகள் அந்த வழியாக சென்ற பஸ்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கங்கை கொண்டான் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து மூட்டைகளில் சாலையில் அடுக்கி இரவு, பகலாக காவல் காத்து வருகிறோம். திடீரென்று மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைத்து வீணாகிவிடும்.
பேச்சுவார்த்தை
கங்கை கொண்டானில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் இருந்தும் ஒரு சில காரணங்களால் நெல்லை விற்பனை செய்யமுடியவில்லை. எனவே, அந்த கொள்முதல் நிலையத்தில் எங்களது நெல்லை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்று சென்றனர்.

Related Tags :
Next Story