குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க முடியாது சட்டசபையில் அமைச்சர் தகவல்
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி தேதியை நீட்டிக்க முடியாது என்று சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பணியமர்த்தல் மற்றும் பயிற்சிக்கான விதிகளில், சில திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியை இவ்வாண்டு தொடங்கி இருப்பதாகவும், மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை, 6 மாத கால அளவிற்குள் முன்மொழிவதற்காக, மனிதவள சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய வேலைவாய்ப்பு
இது காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதை மேலும் தாமதப்படுத்தும். ஆண்டிற்கு 70 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டால்தான் 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் பணியிடங்களை நிரப்ப முடியும்.
ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 6 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலை நீடித்தால், தி.மு.க.வின் வாக்குறுதியில் 10 சதவீதத்தைக்கூட, இந்த ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியாது. எனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குரூப்-2 தேர்வு
குரூப்-2 தேர்வுக்கான ஆதார் எண் இணைக்கப்படுவதற்காக அளிக்கப்படும் ஓ.டி.பி. கிராமப்புறத்தைச் சேர்ந்த பலருக்கு சென்றடையவில்லை. இன்றோடு இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்கும் நாள் முடிகிறது என்பதால், அவர்களுக்காக கால அவகாசத்தை நீட்டித்துத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதில் வருமாறு:-
இந்தத் தேர்வை நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. தனி அமைப்பாகும். குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு இதுவரை 9 லட்சத்து 10 ஆயிரத்து 644 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரே விண்ணப்பதாரர் 2 முறை விண்ணப்பிக்க கூடாது என்ற நடைமுறை 2020-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
என்றாலும், நீதிமன்ற வழக்குகளால் இப்போதுதான் அது அமலுக்கு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கால அவகாசத்தை நீட்டித்தால் அது தவறுக்கு வழி வகுத்துவிடும். வேறு வகையில் இதை சரி செய்ய முடியுமா என்று தேர்வாணையத்துடன் ஆலோசித்து, அடுத்த தேர்வுக்கு முன்பாக உரிய முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Tags :
Next Story