சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...!
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை.
சென்னை,
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இதற்கிடையில், கடந்த 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் நேற்றுமுன் தினம் அதிகரித்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒருலிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. அதன்படி, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 0.75 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 91 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 0.76 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், 2 நாட்கள் விலை ஏற்றத்திற்கு பின் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 91 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story