பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு தீர்ப்பு


பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 24 March 2022 5:45 PM IST (Updated: 25 March 2022 12:53 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாட்டு வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை, 

மதுரை மாவட்டம் மேலூர் கொன்னைபட்டியை சேர்ந்தவர் தாமரை செல்வன் (வயது 31). இவர் மாடு வாக்கி விற்கும் தொழில் செய்துவந்தார். இன்னிலையில் சிங்கம்புனரியை சேர்ந்த ஒருவருடன் மாடு வாங்கி விற்பதில் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவரது வீட்டிற்கு தாமரை செல்வன் அடிக்கடி சென்று வந்தார்.

அப்போது அவர் வீட்டில் இருந்த 10 வது படித்துவந்த 14 வயது சிறுமியிடம் தாமரை செல்வத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வியாபாரி செல்வம் சிறுமியிடம் ஆசை வார்தை கூறி பழகிவந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிக்கு சென்று சிறுமியை தாமரை செல்வன் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் போரில் மாட்டு வியாபாரி தாமரை செல்வனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி டாக்டர். சத்யா  இன்று தீர்ப்பு கூறினார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக தாமரை செல்வனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 25 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட சிறையும்,  சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 7 வருட சிறையும் ரூ. 20 ஆயிரம் அபராதமும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் இழப்பீட்டு தொகையாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story