உணவகத்தில் கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும் : போக்குவரத்து கழகம்


உணவகத்தில் கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும் : போக்குவரத்து கழகம்
x
தினத்தந்தி 24 March 2022 7:33 PM IST (Updated: 24 March 2022 7:33 PM IST)
t-max-icont-min-icon

அரசு பேருந்துகளை உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது

சென்னை ,


அரசு பேருந்துகளை உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது  அதில்; 

 உணவகத்தில் கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும் . பயோ கழிவறை அமைக்கப்பட வேண்டும் 

உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் .

உணவகத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பி. விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.

உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்,  


உணவகத்தில் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய  வேண்டும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது 

Next Story