எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு 6 டன் பாறையில் சிலை
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு 6 டன் பாறையில் சிலை செதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு 6 டன் பாறையில் சிலை செதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பிரபல திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020-ல் மறைந்தார். அவரது உடல் காஞ்சீபுரம் அருகேயுள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.
இங்கு அமைய உள்ள சிலைகள் புதுவை அருகே தமிழக பகுதியான ஆரோவில் சஞ்சீவிநகரில் உள்ள சிற்ப கூடத்தில் உருவாகியுள்ளது. குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு 6 டன் எடையுள்ள பாறையில் மார்பளவு சிலை செதுக்கப்பட்டுள்ளது.
6 டன் பாறை
இதுகுறித்து சிற்ப கூடத்தினர் கூறுகையில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு நினைவு இல்லம் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. அங்கு வைப்பதற்கான ஏராளமான சிலைகள் வடித்துள்ளோம். இதில் ஒரே பாறையை குடைந்து அதில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முகத்தை வடிவமைக்க திட்டமிட்டோம். இதற்காக 6 டன் எடை கொண்ட பாறை திருவக்கரை பகுதியில் இருந்து பெறப்பட்டது.
கடந்த 6 மாதங்களாக இந்த பணி நடைபெற்று வருகிறது. இதில் அவரது அழகிய உருவம் உருவாகியுள்ளது. அதன் அருகில் அவரது கையெழுத்து மற்றும் அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரம் ஆகியவற்றை வடிவமைத்துள்ளோம். பணிகள் முடிவடைந்த நிலையில் சிலைகள் தாமரைப்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story