அரசு ஆஸ்பத்திரி பாரதி பூங்கா பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள்


அரசு ஆஸ்பத்திரி பாரதி பூங்கா பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள்
x
தினத்தந்தி 24 March 2022 11:41 PM IST (Updated: 24 March 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

திருட்டு சம்பவங்களை தடுக்க புதுவை அரசு ஆஸ்பத்திரி, பாரதி பூங்கா பகுதிகளில கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருட்டு சம்பவங்களை தடுக்க புதுவை அரசு ஆஸ்பத்திரி, பாரதி பூங்கா பகுதிகளில கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வாகன திருட்டு
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் வாகன திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அரசு ஆஸ்பத்திரி, பாரதி பூங்கா, பழைய சாராய ஆலை அமைந்துள்ள பகுதிகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போகின்றன.
அரசு ஆஸ்பத்திரிக்கு அவசரமாக வருபவர்களின் கவனக்குறைவை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். அதேபோல் கடற்கரைக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை லே கபே ஓட்டலின் எதிர்புறம் மற்றும் பாரதி பூங்காவின் வாசல், பழைய சாராய ஆலை (கன்வென்சன் சென்டர்) பகுதிகளில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
கண்காணிப்பு கேமரா
இதை நோட்டமிடும் திருட்டு கும்பல் வாகனங்களை திருடி செல்கிறது. அங்கு போதிய கண்காணிப்பு கேமராக்கள் வசதியில்லாததால் வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை கைது செய்து வாகனங்களை மீட்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பெரியகடை போலீசார் பொதுமக்கள் பங்களிப்புடன் அரசு ஆஸ்பத்திரி, பாரதி பூங்கா, லே கபே ஓட்டலின் எதிர்புறம், பழைய சாராய ஆலை பகுதிகளில் 10 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர். இதன் மூலம் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவர்களை எளிதாக கைது செய்யவும், வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் முடியும்.
15 நாட்கள் வரை...
இந்த கண்காணிப்பு கேமராக்களில் 15 நாட்கள் வரை பதிவாகும் காட்சிகளை காண முடியும். மேலும் உருவங்களை மிகத்துல்லியமாக படம் பிடிக்கும் சக்தி மிக்க கேமராக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story